you too seeman?
வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு பரப்புரை செய்யப் போவதாக அறிவித்துள்ளார் சீமான்.இறுதியாக "செந்தமிழன்" சீமான் போயஸ் தோட்டத்தின் காலடியில் சரணடைந்து வீழ்ந்து விட்டார். உனக்கு எதுக்கையா தமிழ் தேசிய அரசியல் எல்லாம் ? வெங்காயம்.
விரைவில் கலைஞரிடம் இருந்து இவ்வாறு அறிக்கை வரலாம்
"தமிழ் தேசியத்துக்கென தயாரிக்கப்பட்ட துவக்கு இன்று ஊழல் அராஜக மாளிகையின் படிக்கட்டில் துருப் பிடித்து கிடக்கிறது"
ஈழத்தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் தந்தை செல்வா. ஆனால் தமிழ் நாட்டுத்தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போல் தெரிகிறது. அய்யகோ !!!
5 comments:
ம்ம்ம்
செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகுந்த ஏமாற்றமே.....செயலலிதாவால், வைகோவால் மு.கண்ணப்பனால் எனக்கும் திமுகவிற்குமான பற்றுதலை பிரிக்கமுடியவில்லை....அதனைப் பிரித்தவர் சீமான்.....அவரும் இது போன்ற ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வருவதென்பது அரசியலின் மீதான நம்பிக்கையை தகர்க்கவே செய்யும்...
சீமான் வயதில்... கருணாநிதி 10 சீமானுக்கு சமம்... பேச்சிலும்... செயலிலும்... அவரே அரசியல் சுழலில் இப்படியாகிப்போனபோது, இவன் என்ன சுண்டைக்காய்?
ஓவரா பேசும்போதே நினைச்சேன் இவன் கடைசியில் கழனிப்பனையில் தான் கையை விட போகிறான் என்று... சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கழனிபானையை முகர்ந்து பார்த்தவன் இப்போது உள்ளே தலையையே விட்டுவிட்டான்...
சீமான் அதிமுகவுடன் சேர்ந்தது வருத்தம் அளிக்கிறது..
விடிவிற்கான வழி ? இன்னமும் விடையில்லா கேள்வியாக உள்ளது தமிழர்களின் துரதிஷ்டம்..
தங்கள் கருத்துக்ளை எழுதும் நண்பர்களே தயவு செஞ்சு சீமானை ஆதரிப்பதையோ இல்ல எதிர்ப்பதையோ விட்டு விட்டு சீமான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுங்கள்.அது மட்டுமே பயனுள்ளதாக அமையும்.
Post a Comment