பெங்களூர் தமிழ் சங்கம் வருகிற பொங்கலை ஒட்டி பல்வேறு நிகழ்சிகளை நடத்துகிறது.தமிழகத்தில் இருந்து "மானமிகு" வீரமணி கலந்து கொள்ளுகிறார்கள். வழக்கம்போல உணர்ச்சி வசப்படும் உரைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கறேன். இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் இதை தொடங்கும் போது ஒரு "பிரம்மாண்ட" ஊர்வலம் சென்று பின்னர் தொடங்குகிறார்கள். நிச்சயம் கன்னடர்கள் இதை ஒரு கெத்து காட்டுகிற வேலையாகத்தான் பார்ப்பார்கள் (பார்க்கிறார்கள்).
நாம் இருப்பது வேறு அந்நிய மொழிக்காரர்களின் ஊரில் என்ற பிரக்ஞ்யே இல்லாமல் அதுவும் நம் மீது வன்மம் அதிகம் இருக்கும் ஒரு ஊரில் இது தேவை அற்றது.
எனக்கென்னவோ இது போன்ற ஒன்று கூடல் நிகழ்வுகளை அரங்குகளுக்குள்ளேயே நடத்தினால் என்ன என்று தோன்றுகிறது.
மற்ற மொழிக்காரர்கள் யாரும் ஊர்வலம் எல்லாம் செல்வதில்லை.
குறிப்பாக மலையாளிகளிடம் நாம் பாடம் படிக்கவேண்டும். கன்னடியர்கள் கூட அவர்களை cunning mallu's என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
தமிழர்கள் எதற்கெடுத்தாலும் ஊர்வலம், பேரணி என்றே பழக்கப் பட்டு விட்டதனாலேயே இதை செய்ய வேண்டியதில்லை. அந்த ஊர்வலத்தில் ஒரு கல் வீசப்பட்டால் கூட கலவரமாக உருவெடுக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை ஒரு மாதிரியாக புரிந்து கொண்டு செயல் படாமல் இருப்பது நலம்.ஊரோடு ஒத்து வாழ வேண்டியது கூட இல்லை ஒத்திசைவு வாழ்வு தேவை என்பதே இக்கணத்தின் அடிப்படை.
5 comments:
இடுகையா இட்டுத் தள்ளுறீங்க? ஆனா, சொல்றதுல ஞாயம் இருக்கு பாருங்க!!
why don't you disable word verification??
நிஜம்தான். தமிழ்ப் பற்றை எவ்வளவு வேணா காட்டலாம். கன்னட எதிர்ப்பைக் காட்டாதவரைக்கும் சரி. மொழி ஜனங்களைப் பிரிக்கிற மாதிரி நடக்காம, சேர்க்கிற மாதிரி என்ன வேணா செய்யலாம். ஒருநாள் கூத்துக்கு உணச்சிவசப் பட்டுட்டு வந்தவங்க போயிடுவாங்க. அங்கேயே இருக்கிறவங்களுக்கு தாலி அறுந்து போகும்!
http://kgjawarlal.wordpress.com
நன்றி அண்ணே..
நன்றி ஜவஹர்..
கோயில்கள் விபச்சார விடுதிகள் ? - காந்தியார் - http://azifair-sirkali.blogspot.com/
Post a Comment