தமிழர் பலரும் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளில் ஒன்றான "தமிழினத் தலைவர்" கலைஞர் ஓரு முடிவு எடுப்பார் ஈழத்தில் செத்து மடிகின்ற நமது சகோதரர்களை காப்பாற்றுவார் என்ற மூட நம்பிக்கை தான் மிக மோசமானது.
கருணாநிதிக்கு தமிழினத் தலைவர் பட்டத்தை யாருமே கொடுக்கவில்லை தனக்குத் தானே சூடிக் கொண்ட பட்டம் தான் அது ஏனென்றால் "பட்டங்கள்" சூடிக்கொள்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.
பிரபாகரன் ஜனநாயகவாதி இல்லை அவர் ஒரு சர்வாதிகாரி என்கிறார் சரி ஜனநாயகவாதி கருணாநிதியின் ஜனநாயகப் பண்புகளை கொஞ்சம் ஆராய்வோம்..
1.அறிஞர் அண்ணாவிற்கு பின் தலைவராக வந்திருக்க வேண்டிய நெடுஞ்செழியனுக்கு குழி பறித்து சினிமாகாரரான எம்.ஜி.ஆருடன் இணைந்து துரோகம் செய்து தலைவராக ஆனார்.
2.பின்னர் தான் தலைவராக வர உதவிய எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதால் அவரை வெளியேற்றி தனது ஜனநாயக பண்பை இரண்டாவதாக நிரூபித்தார்.
3.மிசா கொடுமைகளை அரங்கேற்றிய "ஜனநாயகவாதி" இந்திராவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் நிரூபித்தார்.
4.எந்த தகுதியும் இல்லாத தனது மகனுக்கு பதவி கொடுத்தும்,எங்கே தனது மகனின் மகுடாபிசத்துக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்று வைகோவை வெளியேற்றியும் நிரூபித்தார்.
5.பின்னர் அழகிரி,தயாநிதி,கனிமொழி,கயல்விழி என்று தனது மொத்த குடும்பத்தையும் களத்தில் இறக்கி தமிழ்நாட்டையே கூறு போட்டு முழுமையான ஜனநாயகவாதியாக பரிணமித்துள்ளார்.
ஈழம்,காவிரி,முல்லை பெரியாறு என்று வரலாற்றின் வழி நெடுகிலும் இவருடைய அலட்சியமும், துரோகமும் தொடர்ந்து கொண்டிருகிறது.
நமது "ஜனநாயக அமைப்பே" முட்டாள்தனமான ஒன்று என்பதும் அது முதிர்ச்சியற்ற நமது மக்களுக்கு முற்றிலும் பொருந்தாது என்பதுக்கு சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுவர்களே சாட்சி ஏனென்றால் வெண்கோடுகளால் எல்லை தாண்டும் வாகனங்களை தடுக்க முடியாது என்பதால்தானே..?
கலைஞர் அவர்களே தி.மு.க வில் நீங்கள் உருவாக்கிய "ஜனநாயகம்" சூடமேந்திகளையும்,அடிவருடிகளையும்,துதிபாடிகளையும் உருவாக்கியது தான்.
கருணாநிதிக்கள்,ஜெயலலிதாக்களை(பாசிச) உருவாக்கியதுதான் நமது "ஜனநாயகத்தின்" விபத்து(சாதனை??).
(கடந்த பல தேர்தல்களில் நான் தி.மு.க விற்கே வாக்களித்தேன் குறைந்த தீமை என்ற அடிப்படையில்)
இறுதியாக ஒரு உறுதியான,தீவிரமான நிலையெடுத்து போரட்டத்தை ஆதரிக்க முயற்சி செய்யுங்கள்.
அதன் மூலமாவது துரோகத்தின் வீச்சாவது கொஞ்சம் குறையும் இல்லையெனில் நீரோ மன்னனின் வரிசையில் சேர்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மீண்டும் ஒரு முறை எனது தலைப்பை வாசிக்கிறேன்
"கலைஞர் அவர்களே..! நீங்கள் போராட்டத்தை ஆதரிக்காவிடில் சிங்களவனை ஆதரிப்பதாகத் தான் அர்த்தம்..!"
நேரம் 6:56 Pm
No comments:
Post a Comment