Sunday, December 26, 2010

சன் டி.வி "வீர" பாண்டியனின் சண்டித் தனம்

சன் நியூஸ் தொலைக் காட்சியில் நேற்று இரவு ஏதேச்சையாக வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகச்சியை காணும் பேறு?? கிடைத்தது.
பேட்டி காணப்பட்டவர் ம.தி.மு.க வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய (வெளியேற்றப் பட்ட ?) "கலைப் புலி" தாணு (பேட்டி எடுக்கற அளவுக்கு என்னத்த கிழிச்சார்னு தெரியல ) அதில் வீரபாண்டியன் கேட்ட ஒரு கேள்வி ம.தி.மு.கவில் இருந்து தொடர்ந்து எல்லோரும் வெளியேறி வருகிறார்களே ஏன் ? கட்சியில் தனக்கு சமமான அறிவார்ந்தவர்களின் இருப்பு வைகோ விற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா ? என்ன ஒரு அயோக்கியத்தனமான கேள்வி இது. வெளியேறியவர்கள் அனைவரும் வைகோ விற்கு சமமான "அறிவாற்றல்" பெற்றவர்களா ? அப்படியானால் அவர்களே தலைவர்களாக இருந்திருக்க வேண்டுமே ? இதையே தி.மு.க வில் இருந்து வெளியேறுகிரவர்களிடமும் கேட்பீர்களா மிஸ்டர் "வீர" பாண்டியன் ? வாங்குன காசுக்கு நல்லா தான்யா கூவர

Saturday, February 13, 2010

தப்பித்தல்(காதலில் இருந்து) !!

அது காதல் தான் நான் பதுங்கி கொள்ளவோ

தப்பிக்கவோ வேண்டும்
ஒரு பயங்கரக் கனவினைப் போல
அதன் சிறை சுவர்கள் பெரிதாய் வளர்கின்றன

கவர்ச்சி மிகுந்த முகமூடி மட்டும் மாறியிருக்கிறது
என்னுடைய தாயத்துகளாலும் உரை கற்களாலும்
என்ன பயன் ?
இலக்கியத்தின் பயன்பாடு தெளிவற்ற படிப்பு
கூர்ந்த கற்களால் ஆன வடக்கு நாடுகள் தம்
கடல்களையும், வாள்களையும் பாடுவதற்கு பயன்படுத்திய ஒரு
மொழிக்கான எனது பயிற்சி

நட்புகளின் அமைதி
நூலகங்களின் படியடிக்கூடங்கள்,சாதாரண பொருட்கள்,
பழக்கங்கள்,என் தாயின் இளம் காதல்
என் இறந்த முன்னோர்களால் வீசப்பட்ட போர் வீரர் தன்மையான நிழல்கள்
காலமற்ற இரவு,கனவின்,இரவின் சுவைகள்,?

உன்னுடன் இருத்தல் அல்லது உன்னுடன் இல்லாது இருத்தல்
என்பதைக் கொண்டுதான் நான் காலத்தை அளக்கிறேன்

இப்பொழுது நீர் ஜாடி
நீர் ஊற்றுக்கு மேலாக உடைந்து சிதறுகிறது

இப்பொழுது அந்த மனிதன்
பறவையின் பாடல் ஓசைக்கு உயர்கிறான்

இப்பொழுது ஜன்னல் ஊடாகப் பார்ப்பவர்களை
பிரித்தறிய முடிவதில்லை
ஆனால் இருள் அமைதியை கொணரவில்லை
அது காதல்தான், நானறிவேன்

உன் குரலைக் கேட்டதினால் உண்டான பதற்றமும்
ஆசுவாசமும்,நம்பிக்கையும்,ஞாபகமும்,
அடுத்தடுத்த தொடர்ச்சிகளில் வாழும் பயங்கரமும்.

நம் செயல்கள் அதன் தீர்மானிக்கப்பட்ட
வழியில் தொடர்கின்றன
அதற்கு ஒரு முடிவுண்டென்பது தெரியாது
நான் எனது அரசனை வாளால் வீழ்த்தினேன்
ஷேக்ஸ்பியர் தன் துன்பியல் நாடகத்தின் கதைத்
திட்டத்தை அமைக்க ஏதுவாய்

--ஹோர்ஜ் லூயி போர்ஹெஸ்

நன்றி:வார்த்தையின் ரசவாதம் -பிரம்மராஜன்