Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Tuesday, May 3, 2011

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!.... வைகோ



தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!

பொங்கித் தீர்த்த வைகோ....!

சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற
அங்கயற்​கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.


அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.


இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.


ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும், தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!

நன்றி: ஜூனியர் விகடன்

Wednesday, March 16, 2011

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம்.

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம் எதிர்காலத்தில் நிச்சயம் வைகோ தனக்கு போட்டியாக வருவார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான். இது நிச்சயம் நகைப்புக்குரியதாக தோன்றலாம் ஆனால் உண்மை மறுக்க முடியாத உண்மை. கொஞ்சம் தர்க்க ரீதியாக சிந்தித்தால் இதன் நீண்ட கால சதித் திட்டம் புலப்படும். தமிழக அரசியலை தொடர்ந்து அவதானித்தால் ஒரு சில கட்சிகள் விஷய புகழ் பெற்று முன்னுக்கு வந்தது பின்னர் காணாமல் போனது. த.மா.கா அந்த வகையில் குறிப்பிடத் தக்க கட்சி அது போல எந்த விதமான தெளிந்த அரசியல் சிந்தனைகளும் அற்ற விசயகாந்தின் கட்சியும் கொ.மு.க போன்ற கட்சிகளும் இதில் அடங்கும்.
இப்படி ஒரு சூழ்நிலையை சிந்தித்தால்
கலைஞரின் மறைவுக்குப் பின் எந்த வித தலைமையும் சரியாக அமையாமல் தி.மு.க சிதைவடையத் தொடங்குகிறது. அதில் உள்ள பெருந்தலைகள் எல்லோரும் வைகோவின் பின்னால் அணி வகுக்கத் தொடங்குகிறார்கள். இந்த இடத்தில் தி.முக வை வைகோ கைப்பற்றுகிறார் பின்னர் அவருக்குப் போட்டி நிச்சயம் வைகோ தான்.

காங்கிரசோ நிச்சயம் அந்த இடத்தை நிரப்ப முடியாது ஏனெனில் தமிழக மக்களைப் பொறுத்த அளவில் தலைவர் என்பவர் உள்ளூரில் இருக்க வேண்டும் திராவிட கட்சியாக இருக்க வேண்டும்.
விசயகாந்தும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு தலைமைப் பண்பு இல்லை அவருக்கு வாக்களித்த பலரிடம் கேட்டறிந்த வகையில் இரண்டு பெரிய கட்சி கூட்டணிகளையும் பிடிக்காதவர்கள் இவருக்கு வாக்களித்தார்கள். ஒரு கூட்டணியில் சேர்ந்ததால் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டார்.
இரண்டே இரண்டு காரணங்கள் மட்டும் தான் இறுதியாக தெரிகிறது.
1. நீண்ட கால காரணம் கலைஞருக்குப் பின் பெரிய தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பு
2 குறுகிய காலத்தில் ஒரு எழுபது தொகுதிகள் வென்றால் காங்கிரஸ் ஒரு ஐம்பது அல்லது நாப்பதில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு மறைமுகத்திட்டம் வைத்துள்ளாரோ என்று ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை









Tuesday, February 8, 2011

அ.தி.மு.க வில் சேர்ந்தார் வைகோ ?

திரு வைகோ அவர்கள் நாகையில் உண்ணா நிலை போராட்டம் நடத்திய போது மேடையில் கீழ் காணும் படம் வைக்கப்பட்டுள்ளது
அதாவது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவிற்கு அடுத்து வைகோ
இந்தப் படம் சொல்லும் சேதி என்ன திரு வைகோ அவர்களே ? முழு சரணாகதிக்கு தயார் ஆகிவிட்டீர்கள் என்பது புலனாகிறது. இதற்கு பேசாமால் கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு. க விலேயே சேர்ந்து விடலாம். இதெல்லாம் ஒரு பிழைப்பா ? உங்களை நம்பி இருக்கும் கொஞ்ச நஞ்சம் தொண்டர்களையும் முட்டாளாக்காமல் ஆவது இருங்கள் புரட்(டு)சி புயல் அவர்களே..!