சோனியா அண்டோனியா மைனோ ஜெயாவிற்குதேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற பழ மொழி தான் நினைவுக்கு வருகிறது. அப்படி தேநீர் விருந்துக்கு ஜெயா சென்றால் சீமானின் நிலைப்பாடு என்ன? கருணாநிதி ஒரு துரோகி என்றால் ஜெயா ஒரு முதல் எதிரி என்பதை இந்த so called தமிழ் உணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இவர்களின் இந்த நிலைப்பாடு காரணமாக தமிழ் உணர்வு தனது நிலை பிறழக் கூடும் . எப்பொழுதும் எதிரியை சரியாக அடையாளம் கண்டு கொள்பவனே சரியான இலக்குகளைத் தீர்மானிக்க முடியும் இப்படி முட்டாள் தனமாக இதுக்கு அது பரவாயில்லை அதுக்கு இது பரவாயில்லை என ஓடிக் கொண்டிருந்தால் தீர்வு வராது என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு காலம் ஒத்துக்கு மத்தூதிய இடதுiசாரிக் கும்பல் என்ன செய்யப் போகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும் நாளையே அவர்கள் கலைஞரிடம் காலில் விழுவார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
வழக்கம் போலவே உணர்ச்சி வயப்பட்டு முட்டாள் தனமாக அசுரப் பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்த தமிழ மக்கள் தங்களது முகத்தில் தாங்களே கரியைப் பூசிக் கொள்ளப் போகிறார்கள் நல்லா செருப்படி வாங்கத் தயாராகுங்கள் மக்களே.
ஈழத்து உணர்வாளர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் அவர் ஆணவம் பிடித்த சுய நல வெறியர் என்பதை தந்து நலனுக்காக யாருடனும் கூட்டு சேரத் தயங்காதவர் என்பதை மனதில் கொண்டு விலகி இருக்க வேண்டும்