Tuesday, July 19, 2011

பாலா பதறணும்... அமீர் அலறணும்! படபடக்கிறார் பவர் ஸ்டார்


பாலா பதறணும்... அமீர் அலறணும்!

படபடக்கிறார் பவர் ஸ்டார்
வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரிகளைப் புரட்ட முடியவில்லை. பல பக்கங்களிலும் லகலகவெனச் சிரித்துக்கொண்டு இருக்கிறார் சீனிவாசன்... 'பவர் ஸ்டார்’ சீனிவாசன்!
'லத்திகா’, 'இந்திரசேனா’, 'ஆனந்த தொல்லை’ என விளம்பரங்களில்  அநியாய அலப்பறை கொடுக்கும் பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் மிரட்டல் அதிரடி... 'லத்திகாவின் வெற்றிகரமான 100-வது நாள்’ என மெகா ஃப்ளெக்ஸ். சமீப காலமாக கோடம் பாக்கத்தைக் கதறடிக்கும் புண்ணியவான் இவர்தான்!
அக்குபஞ்சர் மருத்துவராக மதுரையில் இருந்து கிளம்பி வந்து, பவர் ஸ்டாராகப் பரிணமித்த சீனிவாசனைச் சந்திக்கப்போனால், முரட்டுக் கூட்டம் மிரட்டுகிறது. ''ஐ.டி. கார்டு காட்டுங்க!'' என ஒன்றுக்குப் பத்து முறை பரிசோதிக்கிறார்கள். நான்கு, ஐந்து கட்டங்களைத் தாண்டித்தான் பவர் ஸ்டாரின் உதவியாளரையே சந்திக்க முடிகிறது. விசிட்டிங் கார்டு உள்ளே போக, அலறி அடித்து வெளியே வருகிறார் பவர்.
''எத்தனையோ பேர் என்னை வாழ்த்த வந்தாங்க சார். ஆனா, நீங்க நேர்ல வந்து வாழ்த்துவீங்கன்னு நினைக்கலை. இது போதும் சார் எனக்கு!'' என ஏதேதோ சொல்லி உருகத் தொடங்கிவிட்டார்.
''சார், நாங்க ஜாலியா ஒரு பேட்டி எடுக்கத்தான் வந்தோம்!'' எனச் சொல்ல, ''அப்படியா?'' என 'மாயி’ பட மாமனார் கணக்காக இழுவைபோட்டு, ''என்னோட 'லத்திகா’ 100 நாட்கள் தாண்டி ஓடியதை வாழ்த்தத்தான் வந்திருக்கீங்களோனு நினைச்சிட்டேன்!'' என்கிறார் அசடுவழிய.
''டாக்டர் சீனிவாசனும் பவர் ஸ்டார் சீனிவாசனும் சந்தித்தால்?'' என பேட்டியின் ஐடியா சொன்னதும், ''ஹாஸ்பிடலில் இருந்து கோட் எடுத்துட்டு வாங்கப்பா... அப்படியே என்னோட விக்கும்!'' எனக் கட்டளைகள் பறக்கின்றன.
'ரெடி ஸ்டார்ட்’ சொல்ல... சந்திப்பு களைகட்டுகிறது.
டாக்டர்: ''ஒரு டாக்டரா மக்கள் சேவை பண்ண வந்துட்டு, சினிமா பக்கம் போய் ஜிங்கிலி ஆட்டம் போடுறது நியாயம்தானா?''
பவர்: ''டாக்டரா மக்கள் சேவை பண்ணிக்கிட்டு இருந்தா, இந்நேரம் இத்தனை பத்திரிகைகள்ல மின்னி இருக்க முடியுமா? ஈரோட்டுக்குப் போனாக்கூட, 'ஏய்! நம்ம பவர் ஸ்டார்’னு எட்டி எட்டிப் பார்க்குறானுங்க. இந்த அளவுக்குப் பேரும் புகழும் கிடைக்குமா? லத்திகாவோட 100-வது நாளுக்கு எத்தனை பேர் வாழ்த்தினாங்க தெரியுமா? என்னதான் மருத்துவ உலகத்தில் மகத்துவங்களைப் படைச்சாலும், இந்த பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி கிடைச்சிருக்காதே!''
டாக்டர்: ''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'லத்திகா’ 100 நாள் ஓடுச்சா? இல்லே, ஓட வெச்சீங்களா?''
பவர்: ''இதில் மறைக்க என்ன இருக்கு? தானா ஓடுச்சுன்னு சொல்றதைவிட, நானா ஓட்டினேன்னு சொல்றதுலதான் எனக்கும் பெருமை. இன்னிக்கு படம் எடுக்கிறது சுலபம். ஆனா, தியேட்டர் கிடைக்கிறது சாதாரண காரியம் இல்லை. பெரிய பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் கிடைக்காமத் தவிக்கிறப்ப, கமலா, சாந்தி, மகாலட்சுமின்னு அத்தனை தியேட்டர்காரங்களையும் நான் காக்கா பிடிச்சுவெச்சிருக்கேன். போன ஆட்சியில என்னோட படங்களை முடக்கிப்போட, எப்படி எல்லாம் திட்டம் போட்டாங்க தெரியுமா? ஆனாலும், 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்’னு தொடர்ந்து ஹிட் கொடுத்தேன். இன்னிக்கும் 'லத்திகா’ படத்தைப் பார்க்க, ஒரு நாளைக்கு 40 பேருக்கு மேல வர்றாங்க. கடைசி ஒரு ஆள் வர்ற வரைக்கும் படத்தை ஓட்டுங்கனு சொல்லிட்டேன். 150-வது நாள் விளம் பரத்தைப் பக்கம் பக்கமாக் கொடுக் கப்போறேன். கோடம்பாக்கம் அன்னிக்குத்தான் வயித்தெரிச் சல்ல தீ பிடிக்கப்போகுது பாருங்க!''
டாக்டர்: ''நடிப்புங்கிற பேர்ல நீங்க பண்ற அட்ராசிட்டியைத் தாங்க முடியாம பலரும் தவிக்கிறதா பேச்சு இருக்கே?''
பவர்: ''தவிச்சாலும் சரி... தாக்குதல் நடத்தினாலும் சரி... எனக்கு பப்ளிசிட்டி தேவை. அதுக்காகத்தான் சினிமா உலகுக்கு வந்தேன். 'பணத்தை வெச்சுக்கிட்டு ஆட்டம் போடுறான்’னு பலரும் என்னைத் திட்டுறாங்களாம். சில பேர் என் போஸ்டரை வெறிச்சுப் பார்த்து, கிழிக்கிறாங் களாம். என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நான் எதுக்கும் வெட்கப்பட மாட்டேன். நான் நடிக்கிறது என் மனைவிக்கே பிடிக்கலை. மத்தவங் களுக்குப் பிடிச்சா என்ன... பிடிக் கலைன்னா என்ன? இன்னொரு விஷயம் தெரியுமா? என்னோட மூணு மகள்களில் ரொம்பப் பிரியமான பொண்ணு லத்திகா. அவங்க மேல உள்ள பாசத்துலதான் என் படத்துக்கும் 'லத்திகா’னு பேர் வெச்சேன். படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, லத்திகா என்கிட்ட பேசுறதே கிடையாது. இதுக்கு அப்புறமும் நான் நடிக்கிறேன்னா... என்னோட தில்லை நீங்க ரசிக்கணும்... வரவேற்கணும்... கொண்டாடணும்!''
டாக்டர்: ''சில பத்திரிகைகள்ல உங்களைப்பத்தி கிசுகிசுலாம் வருதே?''
பவர்: ''அதெல்லாம் நானா பரப்பிவிட்ட கிசுகிசு. அப்படியும் ஒண்ணு ரெண்டுதான் பேப்பர்ல வந்துச்சு. எத்தனை நடிகர்- நடிகை கள் கிசுகிசுவுக்காக ஏங்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? 'அவரோடு கொஞ்சல்... இவரோடு கெஞ்சல்’னு வந்தா, அந்த வாரம் முழுக்க நம்ம போன் பிஸி. ரசிகனும் முக்கியமான விஷயமா நெனச்சு, மூளையைக் கசக்கிக்கிட்டு அலைவான். மார்க்கெட்ல நம்ம பேர் நிலைக்க ணும்னா, தாரை தப்பட்டைகள் கிழியுற அளவுக்குக் கிசுகிசுக்களைக் கிளப்பிக் கிட்டே இருக்கணும். அதே நேரம், அதுபத்தி யாராவது கேட்டா... எரிஞ்சு விழணும். அப்போதான் கிசுகிசுவுக்கு ஒரு கில்மா எஃபெக்ட் இருக்கும்!''
டாக்டர்: ''சரி, சினிமாவில் உங்களுக்கு என்னதான் இலக்கு?''
பவர்: ''ரஜினி சார் எப்போ ரிட்டர்ன் வருவார்னு ஆசையா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். சூப்பர் ஸ்டாரா... பவர் ஸ்டாராங்கிற ஒரு போட்டியை உருவாக்கி, தமிழ் சினிமா உலகில் டெரரைக் கிளப்பணும். என்னோட அடுத்த படமான 'ஆனந்த தொல்லை’யை 'லத்திகா’வோட 150-வது நாள் அன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறோம். அதுக்கு அடுத்த படம், 'ராணா’ என்னிக்கு ரிலீஸ் ஆகுதோ... அன்னிக்கு களத்துக்கு வரும். அதுல சி.பி.ஐ. ஆபீஸரா வர்றேன். ஸீனுக்கு ஸீன் பட்டாசு பறக்கும். 'லத்திகா’ ஓர் இயக்குநராகவும் என்னை ஜெயிக்கவெச்சிருக்கு. நானும் மதுரைக்காரன்தான். இப்போ வர்ற மதுரைக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற கதைகள், என்கிட்ட டஜன் டஜனா இருக்கு. ஒவ்வொண்ணா ரிலீஸ் ஆகிறப்ப... பாலா பதறணும்... அமீர் அலறணும்... சசி இன்டஸ்ட்ரியைவிட்டே ஓடணும்!''
டாக்டர்: ''நேற்று வரைக்கும் திருமாவளவனோடு நெருக்கமா இருந்துட்டு, ஆட்சி மாறியதும் எம்.நடராஜன், ஓ.பன்னீர்செல்வம்னு சந்திப்பு நடத்தி இருக்கீங்களே... ஒழுங்கா டாக்டர் வேலையை மட்டும் பார்த்து இருந்தா, இப்படி எல்லாம் அல்லாட வேண்டிய அவசியம் இல்லையே?''
பவர்: ''அரசியல் வேறு, நட்பு வேறு! எம்.என். சார் எனக்கு அஞ்சு வருஷமாப் பழக்கம். ஓ.பி.எஸ். அமைச்சரான உடனே ஓடோடிப் போய் வாழ்த்து தெரிவிச்சேன். அடுத்து, அம்மாவைச் சந்திக்கவும் அனுமதி கேட்டு இருக்கேன்.
என் தலைமையில் என் ரசிகர்கள் ஒரு லட்சம் பேரை கார்டனுக்கு அழைச்சுட்டுப் போவேன். நம்பிக்கையானவங்களுக்கு அம்மா நிறைய செய்வாங்க. நாளைக்கே நான் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. வெறும் டாக்டராவே இருந்தா, இப்படி எல்லாம் எதிர்பார்ப்புகளை எகிறவெச்சு சந்தோஷப்பட முடியுமா? புரொடக்ஷன்ல இருக்கும் நம்ம படத்தோட டிரைலர் பார்க்குறீங்களா?'' என்று கேட்டு ரிமோட் பட்டனைத் தட்டுகிறார்.
பஞ்சு மிட்டாய் மேக்கப், குருவிக் கூடு விக்குடன் 'பவர் ஸ்டார்’ முகபாவங்களைப் பிழிந்துகொண்டு இருக்க, அவரிடம் கெஞ்சிக் கதறிக்கொண்டு இருக்கிறார் ஒரு பெண்...
'கட்டின பொண்டாட்டியையே கட்டிவெச்சுக் கற்பழிச்சவன்தானே நீ... உன்கிட்ட எனக்கு என்ன நியாயம் கிடைக்கும்?’
ஏன், ஏன் இந்தக் கொலை வெறி பவர் ஸ்டார்?!

நன்றி: விகடன் 

Sunday, May 15, 2011

ஜெயாவிற்கு சோனியா அண்டோனியா மைனோ தேநீர் விருந்துக்கு அழைப்பு--சீமான் என்ன சொல்லப் போகிறார்?

சோனியா அண்டோனியா மைனோ ஜெயாவிற்குதேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற பழ மொழி தான் நினைவுக்கு வருகிறது. அப்படி தேநீர் விருந்துக்கு ஜெயா சென்றால் சீமானின் நிலைப்பாடு என்ன? கருணாநிதி ஒரு துரோகி என்றால் ஜெயா ஒரு முதல் எதிரி என்பதை இந்த so called தமிழ் உணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

இவர்களின் இந்த நிலைப்பாடு காரணமாக தமிழ் உணர்வு தனது நிலை பிறழக் கூடும் . எப்பொழுதும் எதிரியை சரியாக அடையாளம் கண்டு கொள்பவனே சரியான இலக்குகளைத் தீர்மானிக்க முடியும் இப்படி முட்டாள் தனமாக இதுக்கு அது பரவாயில்லை அதுக்கு இது பரவாயில்லை என ஓடிக் கொண்டிருந்தால் தீர்வு வராது என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு காலம் ஒத்துக்கு மத்தூதிய இடதுiசாரிக் கும்பல் என்ன செய்யப் போகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும் நாளையே அவர்கள் கலைஞரிடம் காலில் விழுவார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

வழக்கம் போலவே உணர்ச்சி வயப்பட்டு முட்டாள் தனமாக அசுரப் பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்த தமிழ மக்கள் தங்களது முகத்தில் தாங்களே கரியைப் பூசிக் கொள்ளப் போகிறார்கள் நல்லா செருப்படி வாங்கத் தயாராகுங்கள் மக்களே.

ஈழத்து உணர்வாளர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் அவர் ஆணவம் பிடித்த சுய நல வெறியர் என்பதை தந்து நலனுக்காக யாருடனும் கூட்டு சேரத் தயங்காதவர் என்பதை மனதில் கொண்டு விலகி இருக்க வேண்டும்

Tuesday, May 3, 2011

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!.... வைகோ



தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!

பொங்கித் தீர்த்த வைகோ....!

சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற
அங்கயற்​கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.


அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.


இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.


ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும், தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!

நன்றி: ஜூனியர் விகடன்

Sunday, May 1, 2011

ஈழம்: கொடூரமும் கொலையும்

ழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்​கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே...


நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்​தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்!

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை

நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால், இந்த வெற்றிக்காக இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. போரில் புலிகள் வட கிழக்குக் கடலோரப் பகுதியான வன்னிக்குத் தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான தமிழர்கள் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாதபடி, வலிமையான இரண்டு போர்க் குழுக்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். இதனால்தான், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் தாக்குண்டு சிதறினார்கள். மறுபுறம் ராணுவத்துக்கு எதிராகப் புலிகள் நடத்திய தாக்குதலிலும் தமிழ் மக்கள் சிக்கிக்கொண்டனர். போர்ச் சூழலில் மனிதாபிமான உதவிகளை வழங்க​வேண்டிய இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்களை அடக்குவதிலேயே குறியாக இருந்ததுதான் பெரும் ​துயரம்!

கடைசிக் கட்டத் தாக்குதல் உக்கிரமாக நடந்தது. அதனால், அந்த இடத்தில் இருந்து எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. 'என்ன நடந்தது?’ என்கிற புதிர் விலகும் முன்னரே, அதிபர் ராஜபக்ஷே 2009 மே 19-ம் தேதி, போரின் வெற்றியை அறிவித்தார். அதனால், இறுதிக் கட்டத் தாக்குதலின் கடுமையும், பாதிப்புகளும் உலகுக்குத் தெரியாமலே போய்விட்டது. போர் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குப் போனார். போர் நடந்த சில இடங்களையும், சில முகாம்களையும் பார்வை இட்டார். அதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அமைக்கப்​பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடக்கத்​தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக குடும்பத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தங்கள் அமைப்பில் ஆட்களை சேர்த்துக்​கொண்டனர். போரின் தீவிரத்தால் ஒரே குடும்பத்தில் இருந்து பலரையும் தங்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கும் சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர். பதுங்கு குழிகள் தோண்டும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்தினர். 2008-ல் புலிகளின் படை பலம் கணிசமாகக் குறைந்துவிட்டது. அவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. புலிகள் வலிமையாக இருந்தபோது, 20,000 பேர் அந்த அமைப்பில் இருந்துள்ளனர். ஆனால், இறுதிக் கட்டப் போரில், அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வெறும் 5,000 ஆகிவிட்டது.

புலிகளை மேலும் முடக்கும் வகையில், 'அமைப்புடன் தொடர்புடையவர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட நபர்​களைக்கூட ராணுவம் சித்ரவதைக்கு உட்படுத்தியது. இதற்காக 'வெள்ளை வேன்’ என்ற ஆபரேஷன் நடத்தப்பட்டது. புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள், அந்த வேனில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அதில் பலர் காணாமலேயே போனார்கள். கொல்லப்​பட்டவர்களின் உடல்கள், ரகசியமாக மறைக்கப்பட்டன. பலர் திரும்பி வராததால், அவர்கள் குறித்து அறிய முடியாத நிலை!

மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த 'வெள்ளை வேன்’ ஆபரேஷனுக்கு இரையாகினர்.

செய்திகளுக்குக் கடுமையான தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. செய்தியாளர்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. சில பத்திரிகையாளர்களின் பெயர்கள், 'புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று ராணுவத்தின் இணையத்தளத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டன.

போர்ச் செய்திகளை வெளியிட கடுமையான நிபந்தனைகள் 2008-ல் விதிக்கப்பட்டன. இதனை மீறிய பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்​களும் மிரட்டப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். போர் முடிந்த பிறகும் இந்த மிரட்டல்கள் வழக்​கத்தில் இருந்தன. அரசை விமர்சித்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்​பட்டார். போத்தல ஜெயந்த 'வெள்ளை வேனில்’ தூக்கிச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்குப் பிறகு விடுவிக்கப்​பட்டார். பல செய்தி நிறுவனங்​கள் நொறுக்கப்பட்டன. இது குறித்து அரசு எந்த விசாரணையும் நடத்த​வில்லை.

இறுதிக் கட்டப் போரின்போது, ஐ.நா. தொண்டு நிறுவனத்தினர், கிளி​நொச்சியை விட்டு வெளியேறிச் சென்றனர். உதவிக் குழுக்களின் உணவு விநியோகத்தை ராணுவம் தடுத்தது. தளவாடங்கள் மற்றும் பொருட்​களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, ராணுவப் பயன்பாட்டுக்காக எடுத்துக்​கொண்டது. அதனால், மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. பசியின் கோரப் பிடியில் சிக்கித் தமிழ் மக்கள் கதறினார்கள்.

இத்தகைய இக்கட்டிலும் உதவிக் குழுவினர் தங்களிடம் இருந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். ஆனால், அந்த இடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாத அளவுக்கு இரு தரப்பினரின் தாக்குதல் இருந்தது. இறுதிக் கட்டப் போரில், இலங்கை ராணுவம் அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகளைக்கூட ராணுவம் விட்டுவைக்கவில்லை. காய​மடைந்த விடுதலைப் புலிகள் சிகிச்சை பெறுவதாக நம்பப்பட்ட மருத்துவமனைகள் மீது மீண்டும், மீண்டும் தாக்குதலை நடத்தியது ராணுவம்!.

நன்றி :ஜூனியர் விகடன்

Tuesday, March 29, 2011

திருமணம் செய்ய என்ன என்ன தகுதிகள் வேண்டும்? ( IT துறையினருக்கு மட்டும்)

இந்தப் பதிவானது முற்றிலும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT Field) சார்ந்தது. மற்ற துறையினரின் அனுபவங்கள் எல்லாம் வழக்கமான சிக்கல்களை கொண்டது தான் என்பதால் அவற்றுக்குள் செல்ல வேண்டியது இல்லை. திருமணம் செய்ய என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது இன்றைய சூழ்நிலையில் மென்பொருள் துறையை சேர்ந்த ஆண் ஒருவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளில் இருந்து நாம் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தைக் காண்போம் அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகள்.

  1. நீங்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் ?

  2. எத்தனை ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்?

  3. உங்களுடைய சம்பளம்?

  4. நீங்கள் பள்ளிக் கல்வியை எங்கு படித்தீர்கள் ?

  5. கல்லூரிக் கல்வியை எங்கு படித்தீர்கள்?

  6. உங்களது உயர்கல்வியை நீங்கள் முழு நேரப் படிப்பாக படித்தீர்களா அல்லது தொலைநிலைக் கல்வி வழியாகவா ?

  7. அந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமா ?

  8. பன்னாட்டு நிறுவனம் என்றால் வெளிநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டதா அல்லது இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டதா ?

  9. நீங்கள் எந்த துறை (domain) சார்ந்து பணி புரிகிறீர்கள்?

  10. நீங்கல் பணி புரிவது நிரலாளராகவா (developer) அல்லது தரக் கட்டுப்பாடா (tester)?

  11. நிரலாளர் என்றால் எந்த தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுகிறீர்கள் (Java or .Net or any others) ?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளைத் தவிர்த்து துறை சாராத மற்ற விடயங்களான சொத்து ,சாதகப் பொருத்தம், குலம்,கோத்திரம்,குடும்பம் இத்தியாதி இத்தியாதிகளும் கேட்கப் பட்டது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவரின் வயது முப்பதுக்கு மேல். இதைப் பார்க்கும்பொழுது இவர்கள் திருமணம் செய்யத்தான் இதை கேட்கிறார்களா அல்லது வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. அதவாது அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இரவில் குடை பிடிப்பான் என்ற முது மொழிக்கேற்பதான் இதைக் காணவேண்டியுள்ளது.


சமூகமானது நிலப் பிரபுவத்துவ மதிப்பீடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தாலும் அதை தங்களது வசதிக்கு ஏற்ப சிலதை ஏற்றுக் கொண்டும் சிலதை விட்டு விட்டும் தொடர்ந்து பண்பாட்டு முன்னகர்வில் செல்கிறது.


மேலைத்தேய நாடுகளைப் போல நிலப்பிரபுத்துவம் அதிலிருந்து உற்பத்தி சார்ந்து முதலாளித்துவம் என படிப் படியாக மாற்றம் நிகழாமல் நமது நாட்டில் சட்டென பெருவளர்ச்சி கண்ட பணித்துறையின்(Service Sector) காரணமாக நிலப்பிரபுத்துவத்தை வைத்துக்கொண்டே முதலாளித்துவத்துக்குள் நுழைந்ததால் இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.





இது மென்பொருள் துறையைப் பொறுத்த அளவில் திடீரென எட்டு கால் பாய்ச்சலில் சென்று முழுக்க மாறிவிட்டதை போன்று ஒரு மெய்நிகர் தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் சமூகம் அந்த அளவு முதிர்ச்சி அடையவில்லை அதற்கு இந்த கேள்விகளைக் கேட்டவரின் வயதே சான்று. அதாவது அவரிடம் என்ன தகுதி பொருளாதாரம்,வேலை இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள ஒரு சராசரி ஆணின் நிலப் பிரபுத்துவ மனம் ஒப்பவில்லை. இது போன்ற தகுதிகளைக் கொண்ட எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது (சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம், சிறிய வயதிலேயே அவர் மேலாளராகி விட்டார்) அவர் சொன்னது எனக்கு வரும் மனைவி வேலைக்கு செல்ல கூடாது என்றார்.



இது கேள்விகளைக் கேட்ட அந்தப் பெண்ணின் அளவுகோலுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. தன்னைவிட தகுதி குறைந்த சம்பளம் குறைவாக வாங்கும் ஆணை எந்தப் பெண்ணுமே அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அந்த அளவு தகுதி உள்ள ஆண் அதற்கு நேர் எதிராக சிந்திக்கிறார்.(நான் வாங்கும் சம்பளமே போதும் எனக்கு துணையாக வருபவர் வீட்டில் இருந்தால் போதும்) .


பெண்களின் இந்த எதிர்பார்ப்புகளை தவறென்றும் சொல்லவில்லை அவர்கள் வேலைக்கு சென்று பெரிதாக சம்பாதித்தாலும் சமூகமும் உடனே மாறி விடாது இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் சமூக மாற்றங்களை உருவாக்க முடியாது.அவர்களை மதிக்க வேண்டும் சமமாக நடத்த வேண்டும் என்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை.


ஆனாலும் பரந்த சிந்தனை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் இவர்களின் சாதி அல்லாமால் வேறு ஏதானும் சாதியில் இருப்பார்கள். அதாவது முன்னாடி சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் நிலை (deadlock situation). (எல்லோராலும் காதலிக்கவும் முடிவதில்லை :))



சரி இதற்கு என்ன தான் தீர்வு? முதலில் இந்த சமூகத்தைப் பற்றி தெளிவான பார்வை வர வேண்டும் பின்னர் அந்தப் பார்வையில் நமது மதிப்பீடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஒரு ஆழ்ந்த புரிதல், விட்டுக் கொடுத்தல், திருமணம் செய்ய அவர் பணிபுரியும் தொழில்நுட்பப் பிரிவுகளை கேட்பது போன்ற முட்டாள் தனமான நடவடிக்கைகளை கைவிடுதல் போன்ற பல "தல்" களின் மூலம் இது முடிவுக்கு வரலாம். ஆனால் மேற் சொன்னதைப் போன்றே அந்த அளவு பக்குவம் வர நீண்ட காலம் பிடிக்கலாம். உங்களது கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்



Wednesday, March 16, 2011

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம்.

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம் எதிர்காலத்தில் நிச்சயம் வைகோ தனக்கு போட்டியாக வருவார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான். இது நிச்சயம் நகைப்புக்குரியதாக தோன்றலாம் ஆனால் உண்மை மறுக்க முடியாத உண்மை. கொஞ்சம் தர்க்க ரீதியாக சிந்தித்தால் இதன் நீண்ட கால சதித் திட்டம் புலப்படும். தமிழக அரசியலை தொடர்ந்து அவதானித்தால் ஒரு சில கட்சிகள் விஷய புகழ் பெற்று முன்னுக்கு வந்தது பின்னர் காணாமல் போனது. த.மா.கா அந்த வகையில் குறிப்பிடத் தக்க கட்சி அது போல எந்த விதமான தெளிந்த அரசியல் சிந்தனைகளும் அற்ற விசயகாந்தின் கட்சியும் கொ.மு.க போன்ற கட்சிகளும் இதில் அடங்கும்.
இப்படி ஒரு சூழ்நிலையை சிந்தித்தால்
கலைஞரின் மறைவுக்குப் பின் எந்த வித தலைமையும் சரியாக அமையாமல் தி.மு.க சிதைவடையத் தொடங்குகிறது. அதில் உள்ள பெருந்தலைகள் எல்லோரும் வைகோவின் பின்னால் அணி வகுக்கத் தொடங்குகிறார்கள். இந்த இடத்தில் தி.முக வை வைகோ கைப்பற்றுகிறார் பின்னர் அவருக்குப் போட்டி நிச்சயம் வைகோ தான்.

காங்கிரசோ நிச்சயம் அந்த இடத்தை நிரப்ப முடியாது ஏனெனில் தமிழக மக்களைப் பொறுத்த அளவில் தலைவர் என்பவர் உள்ளூரில் இருக்க வேண்டும் திராவிட கட்சியாக இருக்க வேண்டும்.
விசயகாந்தும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு தலைமைப் பண்பு இல்லை அவருக்கு வாக்களித்த பலரிடம் கேட்டறிந்த வகையில் இரண்டு பெரிய கட்சி கூட்டணிகளையும் பிடிக்காதவர்கள் இவருக்கு வாக்களித்தார்கள். ஒரு கூட்டணியில் சேர்ந்ததால் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டார்.
இரண்டே இரண்டு காரணங்கள் மட்டும் தான் இறுதியாக தெரிகிறது.
1. நீண்ட கால காரணம் கலைஞருக்குப் பின் பெரிய தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பு
2 குறுகிய காலத்தில் ஒரு எழுபது தொகுதிகள் வென்றால் காங்கிரஸ் ஒரு ஐம்பது அல்லது நாப்பதில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு மறைமுகத்திட்டம் வைத்துள்ளாரோ என்று ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை









Monday, March 14, 2011

இருமைவாதமும் தமிழ் சமூகமும்

தமிழ் நாட்டில் மட்டுமே உண்மை இரண்டு உண்மைகளாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சியில் மக்கள் பேரின்பத்தில் இருக்கிறார்கள் மற்றொரு தொலைக்காட்சியில் மக்கள் பெரும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
மேனாள் அமெரிக்க அரசு தலைவர் சார்சு புசு சொன்னதைப் போல "நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரியுடன் இருப்பதாகத் தான் அர்த்தம்" என்று அச்சுறுத்துகின்றன நடு நிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறை கூவல் விடுகின்றன.
ஆனால் உண்மையான உண்மை என்பது இந்த இரண்டிற்கும் நடுவில் தான் இருக்கிறது
தமிழ் சமூகமே இருமை வாதத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது.இருமை வாதம் என்றவுடன் நன்மை தீமை என்ற இரண்டுக்குமான போராட்டம் என்ற அளவில் நினைத்து விடக் கூடாது அது இரண்டுமே தீமை என்ற அளவில் கெட்டஇருமைகள் ஆக இருக்கின்றன. முதலில் ஒரு அமைப்பு தொடங்கப் படுகிறது பின்னர் அது மெள்ள தீமையை நோக்கி பயணிக்கிறது அந்த தீமைக்கு மாற்றாக நன்மை என்ற பெயருடன் மற்றொரு அமைப்பு வருகிறது பின்னர் அதுவே தீமையை நோக்கி சென்று இன்னொரு மையப் புள்ளியாக மாறத் தொடங்குகிறது.அந்த மையப் புள்ளியிலிருந்து மீண்டும் பல சிதைவுகள் எனத் தொடர்கிறது.இந்த வாதம் திரைத்துறை, அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த இருமைகளைத் தாண்டி மற்றவற்றின் இருப்பிற்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இதன் பட்டியல் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் சேர்த்தே அளிக்கிறது.

தி.மு.க X அ.தி.மு.க
ம.ம.க X இ.யு மு.லீ
மு.மு.க X இன்னொரு மு.மு.க
வி.சி.க X இ .கு.க
பு.த X த.மு.க
கொ.மு.க X கொ.இ.பே.
அ.இ .ச ம.க X பெ.ம.க

திரைப்படத்துறை.
எம்.ஜி.ஆர் X சிவாஜி
ரஜினி X கமல்
அஜித் X விஜய்
சூர்யா X விக்ரம்.
சிம்பு X தனுஷ்

இதழ்கள்
குமுதம் X ஆனந்த விகடன்.
இலக்கியம்
காலச்சுவடு X உயிர்ம்மை
சாரூ நிவேதிதா X ஜெயமோகன்.
தொலைக் காட்சி
கலைஞர் X ஜெயா
இப்படிப் பட்டியல் நீள்கிறது நேர் எதிர் என்று இல்லாமல் இரண்டுமே தீமைகளாகி வெகு நாட்களாகிறது.



Saturday, February 19, 2011

நகரத்தில் வாழ்பவர்கள் மட்டுமே மனிதர்கள் facebook அராஜகம்..!

நீங்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமா facebook இல் கட்டாயம் உறுப்பினராக இருந்தாக வேண்டும் என்ற நிலைக்கு சமூகம் சென்று கொண்டிருக்கிறது. பலர் இதற்க்கு அடிமையாகி விட்டனர்.இன்றைய வாழ்வின் தவிர்க்கவியலாத அளவு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இருக்கிறது வெறும் சமூக வலைத்தளம் என்ற அளவில் இருந்து facebook எனும் முகநூல் பன்முக பயன்பாடுகளை கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்தத் தளம் தன்னளவில் பன்முகத்தன்மையை மறுக்கிறது அதவாது உங்களது சொந்த ஊர் என்ற இடத்தில் நீங்கள் உங்களது சிற்றூரின் (கிராமத்தின்) பெயரை டைப் செய்ய முடியாது அதில் ஏற்கனவே உள்ளீடு செய்யப் பட்டுள்ள ஒரு பட்டியலில் இருந்தே அதை தெரிவு செய்ய முடியும்.

இந்த இடத்தில் அது home town என்று மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஒரு சிற்றூரை சேர்ந்தவராக இருந்தால் அதை இதில் குறிப்பிட முடியாது.அதாவது நகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று சொல்கிறது எனத் தோன்றுகிறது. முக நூலின் இந்த அடையாள மறுப்பையும் பாசிச போக்கையும் கண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு ?

Tuesday, February 8, 2011

அ.தி.மு.க வில் சேர்ந்தார் வைகோ ?

திரு வைகோ அவர்கள் நாகையில் உண்ணா நிலை போராட்டம் நடத்திய போது மேடையில் கீழ் காணும் படம் வைக்கப்பட்டுள்ளது
அதாவது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவிற்கு அடுத்து வைகோ
இந்தப் படம் சொல்லும் சேதி என்ன திரு வைகோ அவர்களே ? முழு சரணாகதிக்கு தயார் ஆகிவிட்டீர்கள் என்பது புலனாகிறது. இதற்கு பேசாமால் கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு. க விலேயே சேர்ந்து விடலாம். இதெல்லாம் ஒரு பிழைப்பா ? உங்களை நம்பி இருக்கும் கொஞ்ச நஞ்சம் தொண்டர்களையும் முட்டாளாக்காமல் ஆவது இருங்கள் புரட்(டு)சி புயல் அவர்களே..!


Monday, January 24, 2011

கன்னட நாடல்லி ஜீவநதி காவேரி!!

கன்னட நாடல்லி ஜீவநதி காவேரி!! இது சமீபத்தில் நான் கேட்ட ஒரு கன்னட திரைப்படப் பாடல் ஆனால் உண்மையில் காவேரி என்பது கர்நாடாகவைப் பொறுத்தவரை ஜீவநதியும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது.

இது இனவெறி அரசியலிற்குதான் ஜீவநதியாகத் திகழ்கிறது. கன்னட வெறியர்கள், கன்னட திரைப்படத்துறை, கன்னட அரசியல்காரர்கள் இவர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பிதம். காவிரியின் மொத்த கொள்ளளவைவிடவும் ( கர்நாடகா, தமிழ் நாடு,புதுச்சேரி,கேரளா ஆகிய அனைத்து பங்கு தாரர்களுக்கும் சேர்த்து) கிருஷ்ணா நதியில் இருந்து கர்நாடகாவிற்கு கிடைக்கும் நீர் மிகவும் அதிகம்(666 tmc). கிருஷ்ணா நதி நீர் பிரச்சினையில் சமீபத்தில் வந்த தீர்ப்பை கூட யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் இருந்தே இதன் அரசியலை நாம் புரிந்துகொள்ளலாம். (வட கர்நாடகாவிற்கும், தென் கர்நாடகாவிற்கும் உணர்வு ரீதியில் ஒட்டுதல் இல்லை இது பற்றி தனி கட்டுரையே எழுதலாம்)

காவேரி பாயும் மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் மைசூரு,மண்டியா சாம்ராஜ் நகர் ஆகிய மூன்று மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துவிடுகிறது. பெங்களுருவிற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் அரசியல் ரீதியாக இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது மேலும் பல ஆண்டுகளாக கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒக்கலிகர் செறிந்து வாழும் மாவட்டங்களில் இது ஓடுவதாலும் இந்த விபரீத விளைவு.

கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் பாயும் ஆறுகளான நேத்ராவதி, ஆர்க்காவதி ,ஷரவாதி ஆறுகளில் வருடத்துக்கு வீணாகும் தண்ணீர் மட்டும் இரண்டாயிரம் டி எம் சி க்கு மேல். இந்த ஆறுகள் மிகக் குறைந்த தூரம் நிலப் பரப்பில் பாய்ந்து கடலில் கலந்து விடுகின்றன. இந்த ஆறுகளில் இருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி நீர் மின்சாரம் தயாரிக்க முடியும் மேலும் அவ்வாறு திருப்பும் நீரை காவேரி ஆற்றில் கலந்தால் ஏராளமான நீர் கிடைக்கும் . இது பற்றிய திட்ட வரைவு கூட முன் அரசின் வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு செய்ய வேண்டிய வேலை என்று எதுவும் இல்லை ஒரு ஒப்புதல் கையொப்பம் மட்டுமே ஆனால் அவர்களுக்கு பிரச்சினையை தீர்க்கும் ஆர்வமும் இல்லை.தமிழனுக்கு தண்ணீர் தர மனமும் இல்லை.

இது மூன்றாம் உலக நாடுகளுக்கே உரித்தான முதிர்ச்சியற்ற தன்மை. எங்கள் ஊரில் பரம்பிக்குளம் கால்வாய் ஓடுகிறது இதில் தண்ணீர் வரும் பொழுது ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் வரும். வராத வாரங்களில் மதகின் சிறிய இடைவெளிகளில் கசிவு நீர் வரும் அதை தலை மடைக்காரர்கள் கல்லை வைத்து அடைத்து அவர்களின் தோட்டங்களுக்கு மட்டுமே பாய்ச்சுவார்கள். அப்பொழுது எனக்கு இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் காவேரி பிரச்சினையில் ஒப்பிடும்போது இதன் சிக்கலை உணர முடிந்தது.

ஒரு கிளை வாய்க்காலில் கூட தலை மடைக்காரர்கள் கல்லை வைத்து தண்ணீரை மடை மாற்றும் பொழுது அவ்வளவு பெரிய ஆற்றில் தலை மடைக்கார்கள் கல்லை வைக்காமல் இருப்பார்களா என்ன? ஆகவே இது மக்களின் அடிப்படையான தன்னலம் தான் இது போன்ற சிக்கல்களுக்கு காரணம்.தன்னலம் மாறாதவரை இதற்கு தீர்வுகளும் இல்லை.

Sunday, January 16, 2011

சத்யராஜின் "Fixed price" பகுத்தறிவு

பெண்கள் என்ன நகை மாட்டுகிற ஸ்டாண்டா எனக் குரலெழுப்பிய பெரியாரின் வழி வந்ததாக அடிக்கடி சொல்லி கொள்(ல்)கிறார் "இனமுரசு சத்யராசு".ஆனால் இப்பொழுது அடிக்கடி ஒரு நகைக்கடை விளம்பரத்தில் தோன்றி "Fixed price" இல் நகை வாங்க சொல்லி வலியுறுத்தி வருகிறார் இது எந்த வகையில் பகுத்தறிவு என்று புரியவில்லை. தனது சொந்த வாழ்வில் எல்லா முரண்பாடுகளையும் அனுமதித்துவிட்டு எல்லா கொள்கைகளையும் சமரசம் செய்துகொண்டு வாழலாம் அதே நேரத்தில் ஊருக்கு நன்றாக உபதேசம் செய்யலாம்.
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறேன்னு அடிக்கடி சொல்றீங்க சார் ஆமாம் உங்க கேரக்டர புரிஞ்சுக்க முடியல  சார்.
அமைதிப்படை பாணியில "தீய முழுங்கச் சொன்னா திக்குன்னு இருக்கும் ,தேன தானே குடிக்க சொல்றான் அடி போகட்டு அடிச்சா போகுதுன்னு அடிசுடீன்களா சார் ?
பணம் குடுத்தா எப்படி வேணா எத வேணா விளம்பரம் செய்வீங்களா சார் ?
ஒரு பழைய படத்தில் டணால் தங்கவேலு அவர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இவ்வாறு பேசுவார்
"இல்லாத கடவுளை கும்படரான்யா அதுவும் தொட்டு கும்படறான்.கேட்டா கடவுள் இருக்காரு ஆனா கண்ணுக்கு தெரியமாட்டார் நு சொல்றான் " கரண்ட் உம் தான் இருக்குது ஆனா கண்ணுக்கு தெரியல "தொட்டு" கும்பிடு பார்க்கலாம்!, "பட்டுன்னு" போயிருவே என்பார் பின்னாலிருந்து பல குரல்கள் ஒலிக்கும் "யோவ்  நாட்ட திருத்தறது இருக்கட்டும்"  மொதல்ல உன் வீட்ட திருத்து என்று"
இது தான் இன்றைய பகுத்தறிவின் நிலை.ஒரு பக்கம் வீரமணி ஜால்றாவின் எல்லையை தொட்டுவிட்டார் கலைஞர் தொலைக்காட்சியில் பட்டி மன்றங்களில் தோன்றி கலைஞரை புகழும் அளவுக்கு அரசனை மிஞ்சிய அரசு விசுவாசி ஆகிவிட்டார்.இதையெல்லாம் பார்க்கும் போது...

இனி ஒரு முறை உயிர் பெற்று நடந்து செல்லும்
வாய்ப்பு கிடைத்தால் இங்கே கல்லாலும் உலோகத்தாலும் ஆன சிலைகளாக நின்றிருக்கும் நீ, நான் படைக்க விரும்பிய தமிழகம் இதுவல்ல என்ற குற்ற உணர்வில் குறுகிச் சிறுத்திருப்பாய்....!

Thursday, January 13, 2011

சாப்ட்வேர் என்ஜினீயரை கொண்டாடாத சமூகம் உருப்படாது?

மாபெரும் ஆன்மா ஒன்று மனித குலத்தை மென்பொருள் துறையாகவும் மென்பொருள் அல்லாத துறைகளாவும் பிரிக்குமென்றால் நான் மென்பொருள் துறையோடுதான் இருப்பேன்.

எழுத்தாளனை கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.எனக்கு தெரிந்த அளவில் மற்ற துறையினர் யாரும் இந்த அளவுக்கு சமூகத்தை குறை சொல்பவர்களாக இல்லை.அதை ஒரு வாதத்திற்கு சரியென்றே வைத்தாலும் ஒரு சமூக அமைப்பில் மற்ற தொழில் செய்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு உதாரணத்திற்கு நான் சார்ந்திருக்கிற மென்பொருள் துறையை எடுத்துக்கொள்வோம்.

இந்த சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை மென்பொருள் துறை வழங்கி வருகிறது.அதை வெறும் பொருளியல் தளத்தில் வைத்து மட்டும் அல்ல மற்ற தளங்களில் அதன் பயன்பாட்டை,வீச்சை  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அனுபவித்து வருகிறார்கள்.
இதன் நேரடி பயன்பாடுகள் என்ற அளவில் எல்லா கட்டணங்களும் இன்று online முறைக்கு விட்டார்கள். பயன்பாடுகளை கொஞ்சம் பார்ப்போம்.
  • மின்கட்டணம்
இது தமிழமெங்கும் online  முறைக்கு மாறியதால் எனது ஊரில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்து அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் கட்டினால் கூட மீதி வரும் தொகையில் சில்லறை சுமார் நான்கு ருபாய் வரை இருந்தால் கூட கிடைக்காது.இவ்வாறு அறவிடும் தொகையில் அந்த ஊழியர் பணி நேரத்திலேயே கம கம வென்று இருப்பார். இந்த தொல்லை இனி அறவே இல்லை. ஆனாலும் இன்னும் பெரும் அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுவும் மாறும் என்று நம்புவோம். தமிழக அரசின் மின் கட்டணத்திற்கான இணையத்தளம் இது தான் https://www.tnebnet.org/awp/TNEB/.

தமிழக அரசின் இந்த முயற்சியை பாராட்டுகிற இவ்வேளையில் இதற்க்கு பின்னால் உள்ள கண்ணுக்கு தெரியாத மென்பொருள் துறையினரின் உழைப்பை கொண்டாடாத சமூகம் உருப்படாது :)
  • தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள்
தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள் என்பன நமது வாழ்வின் ஒரு கொடும் கனவாகத்தான் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வங்கி ஊழியர்கள் நம்மை நடத்தும் விதம்.(ஏதாவது விபரம் தெரியாமல் சென்று விளக்கம் கேட்டால் போதும்,வேற்று கிரக ஜந்துவைப் பார்ப்பது போல பார்ப்பார்கள்) இன்று அந்த இருண்ட  காலம் முடிவடைந்து விட்டது.இன்று முகவரி மாற்றம் போன்ற தவிர்க்க முடியாதவற்றிற்கு  மட்டுமே அந்த அற்புத "முகங்களை" தரிசனம் செய்யவேண்டியது இருக்கிறது.பல வங்கிகள் paasbook இல் பதிவேற்றுவது என்ற நடைமுறைகளை அறவே ஒழித்து விட்டார்கள். இதற்கும் யார் காரணம் ? மென்பொருள் பொறியாளர்கள் தானே ? ஏன் ஒரு நாளாவது தானியங்கி எந்திரங்களின் முன் யாரவது அவர்களை வணங்கி நன்றி செலுத்தி உள்ளார்களா ?. சிந்திக்க சிந்திக்க இந்த சமூகம் நம்  மீது கொண்டுள்ள நன்றியின்மையும் வஞ்சமும் புலப்படுகிறது. :)

மளிகைக்கடை முதல் மாட மாளிகைகளைக் கட்டும் கட்டிடத்துறை வரை தொலை தொடர்பு முதல் தொ(ல்)லைகாட்சி வரை !
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை என்று கருவறை முதல் கல்லறை வரை  மென்பொருள் துறையினரின் உழைப்பை இந்த சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ஆனால் இதற்காக மென்பொருள் துறைக்கென ஒரு நாளை ஒதுக்கி விழா எடுக்க மனம் இல்லை,மாறாக நமக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அவப்பெயர்கள்,அவமானங்கள்,அவமரியாதைகள்தான் ("அ" வில் வேறு வார்த்தைகள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளவும்) எத்தனை எத்தனை !!
  • நாங்கள் ( மற்ற துறையினர்) ஒரு ஆண்டு சம்பாதிப்பதை இவர்கள்(மென்பொருள் துறையினர்) ஓரிரண்டு மாதங்களில் சம்பாதிக்கிறார்கள்.(இதற்கு காரணம் பண மதிப்பு, நாங்கள் அல்ல அய்யா)
  • வகை தொகையின்றி செலவு செய்யும் ஊதாரிகள்.(ஏன் மற்ற துறையில் இருப்பவர்கள் யாரும் ஊதாரித்தனமாக செலவு செய்வதில்லையா? ஊதாரித்தனம் என்பது ஒரு குணநலன் என்றுதான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம்  ஆனால்  அது ஒரு துறை சார்ந்த விடயம் என்று இவர்கள் "கண்டு"பிடித்துள்ளார்கள் (வாழ்க!,தொடர்க!)
  • வீட்டு வாடகை முதல் காய்கறி வரை விலை ஏறுவதற்கு காரணம் நாம் தான் ( ஐயாயிரம் பெறாத வீட்டை பனிரெண்டாயிரம் வாடகை சொல்லும் வீட்டு உரிமையாளர்களின் பேராசையை பற்றி இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்)
  • விழாக் காலங்களில் பொங்கி வழியும் போக்குவரத்திற்கு காரணமும் நாமே.(தெரியாமல் தான் கேட்கிறேன் வளர்ச்சியைப் பரவலாக்காமல் எல்லாவற்றையும் சென்னை,பெங்களூர்,ஹைதராபாத் என்று பெரு நகரங்களில் எல்லா நிறுவனங்களையும் அமைத்து (குவித்து)விட்டு பின்னர் அதற்கான போக்குவரத்து.அடிப்படைக் கட்டமைப்பு  வசதிகளை உருவாக்காமல் இருப்பது இந்த அரசின் குற்றமா இல்லை அது எம் குற்றமா? (மனோகரா பாணியில் வாசிக்கவும்))
  • இவர்களால் தான் கலாச்சாரம் கெடுகிறது குடித்து விட்டு கூத்தடிக்கிறார்கள்( குடிக்காத,கூத்தடிக்காத மற்ற துறை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அய்யா அத்தோடு  இதைப்பற்றி எழுதவதை நிறுத்திவிடுகிறேன்) 
 எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்  நீங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று எழுதுவதற்கு கூட ஒரு மென்பொருள் பொறியாளன் வடிவமைத்த வலைப்பூவைத்தான் பயன் படுத்துகிறீர்கள் அவர்களை என்றாவது கொண்டாடி உள்ளீர்களா என்று சிந்தியுங்கள்.

முடிவாக இவ்வளவு ஏச்சு பேச்சுக்களையும் இழி மொழிகளையும்  தாங்கி எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக வருவோம்.
வாழ்க மென்பொருள் துறை!! வளர்க்க அதன் புகழ்!!
மேரா சாப்ட்வேர் மகான் !! என்றே  சொல்லுவோம் !! பெருமிதம்  கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !!!
இந்த 2011 ஆம் ஆண்டை மென்பொருள் ஆண்டாக அறிவிக்க வேண்டும் என நடுவண் அரசைக் கோரி நிறைவு செய்கிறேன் :)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

Tuesday, January 11, 2011

பெங்களூர் தமிழ் சங்கம்: இது தேவையா?

பெங்களூர் தமிழ் சங்கம் வருகிற பொங்கலை ஒட்டி பல்வேறு நிகழ்சிகளை நடத்துகிறது.தமிழகத்தில் இருந்து "மானமிகு" வீரமணி கலந்து கொள்ளுகிறார்கள். வழக்கம்போல உணர்ச்சி வசப்படும் உரைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கறேன். இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் இதை தொடங்கும் போது ஒரு "பிரம்மாண்ட" ஊர்வலம் சென்று பின்னர் தொடங்குகிறார்கள். நிச்சயம் கன்னடர்கள் இதை ஒரு கெத்து காட்டுகிற வேலையாகத்தான் பார்ப்பார்கள் (பார்க்கிறார்கள்).
நாம் இருப்பது வேறு அந்நிய மொழிக்காரர்களின் ஊரில் என்ற பிரக்ஞ்யே இல்லாமல் அதுவும் நம் மீது வன்மம் அதிகம் இருக்கும் ஒரு ஊரில் இது தேவை அற்றது.
எனக்கென்னவோ இது போன்ற ஒன்று கூடல் நிகழ்வுகளை அரங்குகளுக்குள்ளேயே நடத்தினால் என்ன என்று தோன்றுகிறது.
மற்ற மொழிக்காரர்கள் யாரும் ஊர்வலம் எல்லாம் செல்வதில்லை.
குறிப்பாக மலையாளிகளிடம் நாம் பாடம் படிக்கவேண்டும். கன்னடியர்கள் கூட அவர்களை cunning mallu's என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
தமிழர்கள் எதற்கெடுத்தாலும் ஊர்வலம், பேரணி என்றே பழக்கப் பட்டு விட்டதனாலேயே இதை செய்ய வேண்டியதில்லை. அந்த ஊர்வலத்தில் ஒரு கல் வீசப்பட்டால் கூட கலவரமாக உருவெடுக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை ஒரு மாதிரியாக புரிந்து கொண்டு செயல் படாமல் இருப்பது நலம்.ஊரோடு ஒத்து வாழ வேண்டியது கூட இல்லை ஒத்திசைவு வாழ்வு தேவை என்பதே இக்கணத்தின் அடிப்படை.

Monday, January 10, 2011

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் செம்மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை

இன்பி நாராயண மூர்த்தி அவர்கள் செம்மொழிகளில் இருந்து படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காக சுமார் இருபது கோடி ரூபாய் வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். மொழி பெயர்க்கப் படும் நூல்கள் பின்னர் "The murthy's Classical Library" என்ற பெயரில் இந்தியாவில் நூலகமாக வைக்கப் படும். சரி அவர் பட்டியலில் என்ன என்ன மொழிகள் இருக்கிறது (தமிழும் இருக்கும் என்று நப்பாசையோடு) என்று ஆர்வத்தோடு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது

அந்த பட்டியல்


  • சமற்கிருதம்

  • பாரசீகம்

  • உருது.

என்ன மாதிரியான தயக்கம் என்று புரியவில்லை.

பாரசீகத்தை விடவா தமிழ் முக்கியத்துவம் இல்லாத மொழி ?

ஒருவேளை மொழிபெயர்க்கப் படும் அளவுக்கு தமிழில் இலக்கியங்களே இல்லை என்று கருதுகிறார்களோ என்று ஐயமாக இருக்கிறது.

ஓட்டுப் பொறுக்கி ஆகியே விட்டார் சீமான்!!

you too seeman?
வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு பரப்புரை செய்யப் போவதாக அறிவித்துள்ளார் சீமான்.இறுதியாக "செந்தமிழன்" சீமான் போயஸ் தோட்டத்தின் காலடியில் சரணடைந்து வீழ்ந்து விட்டார். உனக்கு எதுக்கையா தமிழ் தேசிய அரசியல் எல்லாம் ? வெங்காயம்.
விரைவில் கலைஞரிடம் இருந்து இவ்வாறு அறிக்கை வரலாம்
"தமிழ் தேசியத்துக்கென தயாரிக்கப்பட்ட துவக்கு இன்று ஊழல் அராஜக மாளிகையின் படிக்கட்டில் துருப் பிடித்து கிடக்கிறது"
ஈழத்தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் தந்தை செல்வா. ஆனால் தமிழ் நாட்டுத்தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போல் தெரிகிறது. அய்யகோ !!!

தொப்பி தொப்பியே (துப்பி துப்பியே) பதில் சொல்லுங்கள்?

பதிவுலகில் திருட்டு டீவீடீ யை ஆதரிக்கும் தேசிய மயக்கம் கொண்ட தொப்பி தொப்பி என்பவரின் சீமானே பதில் சொல்லுங்கள் என்ற பதிவிற்கான எதிர்வினை தான் இது. முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள் நண்பரே.
  1. சீமானைப் பற்றி எழுதுவதற்காக யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?
  2. சீமானைப் பற்றி உடன் பிறப்புகள்,பொதுவுடமையாளர்கள் எழுதிய பதிவுகளை இலவச இணைப்பாக தருவது ஏன்? நீங்கள் தி மு கவினரின் கைக்கூலியா ?
  3. இந்திய தேசியம் என்பது என்ன ?
  4. கருநாடகாவில் தமிழர் கன்னடர் ஒற்றுமை கோடி கட்டிப் பறக்கிறதா ? சொல்லவே இல்ல. மொதல்ல கர்நாடகாவுல வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் சொல்லுங்கய்யா ஒற்றுமையப்பத்தி. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை நிறுத்துக மேலும் கன்னடர் தமிழர் ஒற்றுமை பற்றி அறிய http://churumuri.wordpress.com/2007/05/09/churumuri-poll-who-killed-bangalore/
  5. சென்ற பாராளுமன்ற தேர்தலில் சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியதே அதற்கு உங்கள் கருத்து துப்பல் ?
  6. இந்தி தேசிய மொழி, united states of india என்று வரலாறும் தெரியாமல் புவியியலும் தெரியாமல் உளறுவது ஏன் ? ப்ளாக் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காகவா ?
  7. வட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை காதலிக்கிறார்கள் என்று உளறுவது ஏன் ? (இந்த விவகாரம் நடந்தது கருநாடக மாநிலம் மங்களூர் மற்றும் கனர பகுதிகள் இதன் உண்மை தன்மை பற்றி வினவில் கட்டுரை வந்ததே (http://www.vinavu.com/2010/02/02/love-jihad/) இணைப்பு ஏன் தரவில்லை வினவில் இருந்து தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வசதியாக மறந்து விடுவது என்ன selective amnesia வா ?
  8. எங்களது ஒற்றுமையைப் பதம் பாத்து தான் நீ அரசியல் லாபமும் பணமும் பெறவேண்டும் என நினைத்தால் அதற்கு என் நாட்டைப் பயன் படுத்த அனுமதிக்க மாட்டேன் --துப்பி துப்பி ( பெயர் காரணத்தை பின்பு விளக்குகிறேன் ) என்ன ஒரு தத்துவ முத்து (துப்பல்) பாருங்கள் நம்ம கிட்ட என்ன ஒற்றுமை வாழுதுன்னு கொஞ்சம் விளக்க முடியுமா ? காவிரி, முல்லைப் பெரியாறு இதெல்லாம் இந்தியாவில் தான் இருக்கிறதே அதே இந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டிற்கு ஏன் தண்ணீர் வரவில்லை ? இது பற்றி சிந்திக்க உங்கள் தொப்பி போட்ட மண்டயில் மசாலா இல்லையா அல்லது உங்களது மூளைக்கும் சேர்த்து தொப்பி போட்டுக் கொண்டுள்ளீர்களா ?
  9. தமிழனை அங்கே அடிக்கிறான் இங்கே அடிக்கிறான் என்கிறாயே ? ஏன் தமிழன் என்பதற்காகவா அடித்தான் ? இது இவரின் இன்னொரு தத்துவ முத்து-- பின்ன எதுக்கய்யா அடிக்கிறான் ? கொஞ்சம் விளக்க முடியுமா ?
  10. சினிமா என்பதே ஆபாசம் என்று கூறும் அறிவு ஜீவியான நீங்கள் அதை திருட்டு டீவீடீ இல் பார்க்குமாறு வேண்டுவது ஏன் ? அப்படி அந்த ஆபாசக் குப்பைகளை பார்த்தால் மட்டும் எப்படி குடும்பம் முன்னேறும் அது மேலும் மேலும் சீரழிவைக் கொண்டுவந்து தானே நிறுத்தும் ?
  11. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தான் சிறையில் தான் தள்ளப் படுவேன் என்று சீமான் கூறி உள்ளாரே அதைப் பற்றி ஏன் கள்ள மௌனம் ?
  12. அயல் நாட்டில் உள்ள தீவிரவாத கும்பலிடம் பணம் வாங்கி கொண்டு சீமான் பேசுவதாக சொல்லும் நீங்கள் அந்த தீவிரவாத கும்பலின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா ?
  13. தமிழர்களை இந்தியாவிற்கு எதிராக மாற்றித்தான் சீமான் அரசியல் செய்ய வேண்டுமா ? நல்ல இருக்கு கதை தமிழன் எப்போ எதிரா போனான் அந்த இந்தியா தானே தமிழனுக்கு எதிரா இருக்கு அத தானே சீமான் சொல்கிறார்
  14. உங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பம்மிக் கொண்டு பதிவு வசை பாடுவது ஏன் ?
  15. இறுதியாக "நமது" உறவு பலப்பட என்று ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளீர்களே அந்த நமது என்பது யார் ? உடன் பிறப்பு கும்பலா ?

இந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்

இறுதியாக பெயர்க்காரணம் இவர் இந்த நபர் சீமான் மீது வசைமாரி பொழிவதாக நினைத்துக் கொண்டு இவர் மல்லாந்து படுத்துக் கொண்டு துப்பிக் கொண்டிருக்கிறார் எனவே இவரின் பெயர் துப்பி துப்பி என்று குறிப்பிடுகிறேன்

கருத்துக்களை திறந்த மனதோடு வரவேற்கிறேன் !!