Monday, January 10, 2011

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் செம்மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை

இன்பி நாராயண மூர்த்தி அவர்கள் செம்மொழிகளில் இருந்து படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காக சுமார் இருபது கோடி ரூபாய் வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். மொழி பெயர்க்கப் படும் நூல்கள் பின்னர் "The murthy's Classical Library" என்ற பெயரில் இந்தியாவில் நூலகமாக வைக்கப் படும். சரி அவர் பட்டியலில் என்ன என்ன மொழிகள் இருக்கிறது (தமிழும் இருக்கும் என்று நப்பாசையோடு) என்று ஆர்வத்தோடு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது

அந்த பட்டியல்


  • சமற்கிருதம்

  • பாரசீகம்

  • உருது.

என்ன மாதிரியான தயக்கம் என்று புரியவில்லை.

பாரசீகத்தை விடவா தமிழ் முக்கியத்துவம் இல்லாத மொழி ?

ஒருவேளை மொழிபெயர்க்கப் படும் அளவுக்கு தமிழில் இலக்கியங்களே இல்லை என்று கருதுகிறார்களோ என்று ஐயமாக இருக்கிறது.

3 comments:

Anonymous said...

தமிழ் இல்லாதது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது.

தமிழ்மலர் said...

தமிழ் இல்லாதது வருத்தம் அளிக்கிறது

Indian said...

மேட்டர் ரொம்ப சிம்பிள்.

அவரு பெங்களூருல வாழ வேண்டாமா? தமிழையும் சேர்த்தா அப்புறம் கன்னடத்தை சேர்க்கலேன்னு கர்நாடக ரக்ஷன வேதிகேகாரங்க இன்போசிஸ் ஆபிஸ்ல கல்லெறிவாங்க. அதெல்லாம் தேவையா அவருக்கு?

ரெண்டாவது அது அவரோட தனிமனித விருப்பம். இதை செய், அதை செய்ன்னு அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

Post a Comment