Monday, January 24, 2011

கன்னட நாடல்லி ஜீவநதி காவேரி!!

கன்னட நாடல்லி ஜீவநதி காவேரி!! இது சமீபத்தில் நான் கேட்ட ஒரு கன்னட திரைப்படப் பாடல் ஆனால் உண்மையில் காவேரி என்பது கர்நாடாகவைப் பொறுத்தவரை ஜீவநதியும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது.

இது இனவெறி அரசியலிற்குதான் ஜீவநதியாகத் திகழ்கிறது. கன்னட வெறியர்கள், கன்னட திரைப்படத்துறை, கன்னட அரசியல்காரர்கள் இவர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பிதம். காவிரியின் மொத்த கொள்ளளவைவிடவும் ( கர்நாடகா, தமிழ் நாடு,புதுச்சேரி,கேரளா ஆகிய அனைத்து பங்கு தாரர்களுக்கும் சேர்த்து) கிருஷ்ணா நதியில் இருந்து கர்நாடகாவிற்கு கிடைக்கும் நீர் மிகவும் அதிகம்(666 tmc). கிருஷ்ணா நதி நீர் பிரச்சினையில் சமீபத்தில் வந்த தீர்ப்பை கூட யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் இருந்தே இதன் அரசியலை நாம் புரிந்துகொள்ளலாம். (வட கர்நாடகாவிற்கும், தென் கர்நாடகாவிற்கும் உணர்வு ரீதியில் ஒட்டுதல் இல்லை இது பற்றி தனி கட்டுரையே எழுதலாம்)

காவேரி பாயும் மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் மைசூரு,மண்டியா சாம்ராஜ் நகர் ஆகிய மூன்று மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துவிடுகிறது. பெங்களுருவிற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் அரசியல் ரீதியாக இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது மேலும் பல ஆண்டுகளாக கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒக்கலிகர் செறிந்து வாழும் மாவட்டங்களில் இது ஓடுவதாலும் இந்த விபரீத விளைவு.

கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் பாயும் ஆறுகளான நேத்ராவதி, ஆர்க்காவதி ,ஷரவாதி ஆறுகளில் வருடத்துக்கு வீணாகும் தண்ணீர் மட்டும் இரண்டாயிரம் டி எம் சி க்கு மேல். இந்த ஆறுகள் மிகக் குறைந்த தூரம் நிலப் பரப்பில் பாய்ந்து கடலில் கலந்து விடுகின்றன. இந்த ஆறுகளில் இருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி நீர் மின்சாரம் தயாரிக்க முடியும் மேலும் அவ்வாறு திருப்பும் நீரை காவேரி ஆற்றில் கலந்தால் ஏராளமான நீர் கிடைக்கும் . இது பற்றிய திட்ட வரைவு கூட முன் அரசின் வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு செய்ய வேண்டிய வேலை என்று எதுவும் இல்லை ஒரு ஒப்புதல் கையொப்பம் மட்டுமே ஆனால் அவர்களுக்கு பிரச்சினையை தீர்க்கும் ஆர்வமும் இல்லை.தமிழனுக்கு தண்ணீர் தர மனமும் இல்லை.

இது மூன்றாம் உலக நாடுகளுக்கே உரித்தான முதிர்ச்சியற்ற தன்மை. எங்கள் ஊரில் பரம்பிக்குளம் கால்வாய் ஓடுகிறது இதில் தண்ணீர் வரும் பொழுது ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் வரும். வராத வாரங்களில் மதகின் சிறிய இடைவெளிகளில் கசிவு நீர் வரும் அதை தலை மடைக்காரர்கள் கல்லை வைத்து அடைத்து அவர்களின் தோட்டங்களுக்கு மட்டுமே பாய்ச்சுவார்கள். அப்பொழுது எனக்கு இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் காவேரி பிரச்சினையில் ஒப்பிடும்போது இதன் சிக்கலை உணர முடிந்தது.

ஒரு கிளை வாய்க்காலில் கூட தலை மடைக்காரர்கள் கல்லை வைத்து தண்ணீரை மடை மாற்றும் பொழுது அவ்வளவு பெரிய ஆற்றில் தலை மடைக்கார்கள் கல்லை வைக்காமல் இருப்பார்களா என்ன? ஆகவே இது மக்களின் அடிப்படையான தன்னலம் தான் இது போன்ற சிக்கல்களுக்கு காரணம்.தன்னலம் மாறாதவரை இதற்கு தீர்வுகளும் இல்லை.

5 comments:

nanban said...

மிகவும் சரி. பிறரை எதிர்பார்க்காமல் நமது நீர் ஆதாரங்களை பெருக்கிக்கொள்ள வேண்டும்.

செந்திலான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பன் அவர்களே!!

Raja said...

தண்ணீரை பொறுத்தவரை தமிழன், இருக்கும் ஆறுகளை எல்லாம் சீரழித்து, பின் அண்டை மாநிலத்திலரிடம் கையேந்துவதே
பிழைப்பாய் போயிற்று :(

Unknown said...

மம்மி வேண்டாம்... டி.வி. போதும்! : அம்மாக்கள் அலர்ட் http://azifair-sirkali.blogspot.com/

செந்திலான் said...

அபிஜிர் உங்க பதிவ விளம்பரம் செய்ய என்னோட தளம் தானா கிடைச்சுது?

Post a Comment