Sunday, January 16, 2011

சத்யராஜின் "Fixed price" பகுத்தறிவு

பெண்கள் என்ன நகை மாட்டுகிற ஸ்டாண்டா எனக் குரலெழுப்பிய பெரியாரின் வழி வந்ததாக அடிக்கடி சொல்லி கொள்(ல்)கிறார் "இனமுரசு சத்யராசு".ஆனால் இப்பொழுது அடிக்கடி ஒரு நகைக்கடை விளம்பரத்தில் தோன்றி "Fixed price" இல் நகை வாங்க சொல்லி வலியுறுத்தி வருகிறார் இது எந்த வகையில் பகுத்தறிவு என்று புரியவில்லை. தனது சொந்த வாழ்வில் எல்லா முரண்பாடுகளையும் அனுமதித்துவிட்டு எல்லா கொள்கைகளையும் சமரசம் செய்துகொண்டு வாழலாம் அதே நேரத்தில் ஊருக்கு நன்றாக உபதேசம் செய்யலாம்.
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறேன்னு அடிக்கடி சொல்றீங்க சார் ஆமாம் உங்க கேரக்டர புரிஞ்சுக்க முடியல  சார்.
அமைதிப்படை பாணியில "தீய முழுங்கச் சொன்னா திக்குன்னு இருக்கும் ,தேன தானே குடிக்க சொல்றான் அடி போகட்டு அடிச்சா போகுதுன்னு அடிசுடீன்களா சார் ?
பணம் குடுத்தா எப்படி வேணா எத வேணா விளம்பரம் செய்வீங்களா சார் ?
ஒரு பழைய படத்தில் டணால் தங்கவேலு அவர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இவ்வாறு பேசுவார்
"இல்லாத கடவுளை கும்படரான்யா அதுவும் தொட்டு கும்படறான்.கேட்டா கடவுள் இருக்காரு ஆனா கண்ணுக்கு தெரியமாட்டார் நு சொல்றான் " கரண்ட் உம் தான் இருக்குது ஆனா கண்ணுக்கு தெரியல "தொட்டு" கும்பிடு பார்க்கலாம்!, "பட்டுன்னு" போயிருவே என்பார் பின்னாலிருந்து பல குரல்கள் ஒலிக்கும் "யோவ்  நாட்ட திருத்தறது இருக்கட்டும்"  மொதல்ல உன் வீட்ட திருத்து என்று"
இது தான் இன்றைய பகுத்தறிவின் நிலை.ஒரு பக்கம் வீரமணி ஜால்றாவின் எல்லையை தொட்டுவிட்டார் கலைஞர் தொலைக்காட்சியில் பட்டி மன்றங்களில் தோன்றி கலைஞரை புகழும் அளவுக்கு அரசனை மிஞ்சிய அரசு விசுவாசி ஆகிவிட்டார்.இதையெல்லாம் பார்க்கும் போது...

இனி ஒரு முறை உயிர் பெற்று நடந்து செல்லும்
வாய்ப்பு கிடைத்தால் இங்கே கல்லாலும் உலோகத்தாலும் ஆன சிலைகளாக நின்றிருக்கும் நீ, நான் படைக்க விரும்பிய தமிழகம் இதுவல்ல என்ற குற்ற உணர்வில் குறுகிச் சிறுத்திருப்பாய்....!

4 comments:

sivakumar said...

சரியாகத்தான் கேட்டுள்ளீர்கள், திரைப்படங்களில்தான் கொள்கைப்படி நடிக்கமுடியாது. கொள்கைக்கெதிராக விளம்பரப்படங்களில் ஏன் தோன்ற வேண்டும் ? பிறகு, வீட்டைத் திருத்திட்டுத்தான் நாட்டைத் திருத்தவேண்டுமென்பதில் உடன்பாடில்லை. நாம் வலைப்பூவில் எழுதுவதையெல்லாம் குடும்பத்தினர் விருப்பப்படியா எழுதுகிறோம்? பெரியார் கூட அதைச் செய்திருக்க முடியாதல்லவா ?

செந்திலான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் வினை அவர்களே.வீட்டை திருத்தாவிட்டால் கூட பரவாயில்லை தன்னலவாவது உண்மையாக இருக்கலாம் அந்த ஆதங்கத்தில் தான் சொன்னேன்

yeskha said...

பெரியார் பத்தி பேசலாங்க.... மூச்சு விடாம பேசலாம்....... உக்காந்து பேசலாம்...... நின்னுகிட்டு பேசலாம்........ எப்படி வேணாலும் உக்காந்து கிட்டு பேசலாம்........ காசு கிடைக்குமா? தர்றீங்களா?

Raja said...

பாவம் பிழைத்து போறார் விடுங்க... இப்ப படத்துல வேற சரியாய் சான்ஸ் இல்ல.. அவரும் என்ன பண்ணுவார் பாவம் ...
கீ வீரமணிக்கு இவர் தேவலை

Post a Comment