


ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே...
நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்!
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை
நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால், இந்த வெற்றிக்காக இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. போரில் புலிகள் வட கிழக்குக் கடலோரப் பகுதியான வன்னிக்குத் தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான தமிழர்கள் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாதபடி, வலிமையான இரண்டு போர்க் குழுக்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். இதனால்தான், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் தாக்குண்டு சிதறினார்கள். மறுபுறம் ராணுவத்துக்கு எதிராகப் புலிகள் நடத்திய தாக்குதலிலும் தமிழ் மக்கள் சிக்கிக்கொண்டனர். போர்ச் சூழலில் மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டிய இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்களை அடக்குவதிலேயே குறியாக இருந்ததுதான் பெரும் துயரம்!
கடைசிக் கட்டத் தாக்குதல் உக்கிரமாக நடந்தது. அதனால், அந்த இடத்தில் இருந்து எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. 'என்ன நடந்தது?’ என்கிற புதிர் விலகும் முன்னரே, அதிபர் ராஜபக்ஷே 2009 மே 19-ம் தேதி, போரின் வெற்றியை அறிவித்தார். அதனால், இறுதிக் கட்டத் தாக்குதலின் கடுமையும், பாதிப்புகளும் உலகுக்குத் தெரியாமலே போய்விட்டது. போர் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குப் போனார். போர் நடந்த சில இடங்களையும், சில முகாம்களையும் பார்வை இட்டார். அதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடக்கத்தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக குடும்பத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தங்கள் அமைப்பில் ஆட்களை சேர்த்துக்கொண்டனர். போரின் தீவிரத்தால் ஒரே குடும்பத்தில் இருந்து பலரையும் தங்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கும் சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர். பதுங்கு குழிகள் தோண்டும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்தினர். 2008-ல் புலிகளின் படை பலம் கணிசமாகக் குறைந்துவிட்டது. அவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. புலிகள் வலிமையாக இருந்தபோது, 20,000 பேர் அந்த அமைப்பில் இருந்துள்ளனர். ஆனால், இறுதிக் கட்டப் போரில், அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வெறும் 5,000 ஆகிவிட்டது.
புலிகளை மேலும் முடக்கும் வகையில், 'அமைப்புடன் தொடர்புடையவர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட நபர்களைக்கூட ராணுவம் சித்ரவதைக்கு உட்படுத்தியது. இதற்காக 'வெள்ளை வேன்’ என்ற ஆபரேஷன் நடத்தப்பட்டது. புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள், அந்த வேனில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அதில் பலர் காணாமலேயே போனார்கள். கொல்லப்பட்டவர்களின் உடல்கள், ரகசியமாக மறைக்கப்பட்டன. பலர் திரும்பி வராததால், அவர்கள் குறித்து அறிய முடியாத நிலை!
மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த 'வெள்ளை வேன்’ ஆபரேஷனுக்கு இரையாகினர்.
செய்திகளுக்குக் கடுமையான தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. செய்தியாளர்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. சில பத்திரிகையாளர்களின் பெயர்கள், 'புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று ராணுவத்தின் இணையத்தளத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டன.
போர்ச் செய்திகளை வெளியிட கடுமையான நிபந்தனைகள் 2008-ல் விதிக்கப்பட்டன. இதனை மீறிய பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மிரட்டப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். போர் முடிந்த பிறகும் இந்த மிரட்டல்கள் வழக்கத்தில் இருந்தன. அரசை விமர்சித்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்பட்டார். போத்தல ஜெயந்த 'வெள்ளை வேனில்’ தூக்கிச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பல செய்தி நிறுவனங்கள் நொறுக்கப்பட்டன. இது குறித்து அரசு எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இறுதிக் கட்டப் போரின்போது, ஐ.நா. தொண்டு நிறுவனத்தினர், கிளிநொச்சியை விட்டு வெளியேறிச் சென்றனர். உதவிக் குழுக்களின் உணவு விநியோகத்தை ராணுவம் தடுத்தது. தளவாடங்கள் மற்றும் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, ராணுவப் பயன்பாட்டுக்காக எடுத்துக்கொண்டது. அதனால், மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. பசியின் கோரப் பிடியில் சிக்கித் தமிழ் மக்கள் கதறினார்கள்.
இத்தகைய இக்கட்டிலும் உதவிக் குழுவினர் தங்களிடம் இருந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். ஆனால், அந்த இடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாத அளவுக்கு இரு தரப்பினரின் தாக்குதல் இருந்தது. இறுதிக் கட்டப் போரில், இலங்கை ராணுவம் அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகளைக்கூட ராணுவம் விட்டுவைக்கவில்லை. காயமடைந்த விடுதலைப் புலிகள் சிகிச்சை பெறுவதாக நம்பப்பட்ட மருத்துவமனைகள் மீது மீண்டும், மீண்டும் தாக்குதலை நடத்தியது ராணுவம்!.
நன்றி :ஜூனியர் விகடன்
மேலே கேட்கப்பட்ட கேள்விகளைத் தவிர்த்து துறை சாராத மற்ற விடயங்களான சொத்து ,சாதகப் பொருத்தம், குலம்,கோத்திரம்,குடும்பம் இத்தியாதி இத்தியாதிகளும் கேட்கப் பட்டது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவரின் வயது முப்பதுக்கு மேல். இதைப் பார்க்கும்பொழுது இவர்கள் திருமணம் செய்யத்தான் இதை கேட்கிறார்களா அல்லது வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. அதவாது அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இரவில் குடை பிடிப்பான் என்ற முது மொழிக்கேற்பதான் இதைக் காணவேண்டியுள்ளது.
சமூகமானது நிலப் பிரபுவத்துவ மதிப்பீடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தாலும் அதை தங்களது வசதிக்கு ஏற்ப சிலதை ஏற்றுக் கொண்டும் சிலதை விட்டு விட்டும் தொடர்ந்து பண்பாட்டு முன்னகர்வில் செல்கிறது.
மேலைத்தேய நாடுகளைப் போல நிலப்பிரபுத்துவம் அதிலிருந்து உற்பத்தி சார்ந்து முதலாளித்துவம் என படிப் படியாக மாற்றம் நிகழாமல் நமது நாட்டில் சட்டென பெருவளர்ச்சி கண்ட பணித்துறையின்(Service Sector) காரணமாக நிலப்பிரபுத்துவத்தை வைத்துக்கொண்டே முதலாளித்துவத்துக்குள் நுழைந்ததால் இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.
இது மென்பொருள் துறையைப் பொறுத்த அளவில் திடீரென எட்டு கால் பாய்ச்சலில் சென்று முழுக்க மாறிவிட்டதை போன்று ஒரு மெய்நிகர் தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் சமூகம் அந்த அளவு முதிர்ச்சி அடையவில்லை அதற்கு இந்த கேள்விகளைக் கேட்டவரின் வயதே சான்று. அதாவது அவரிடம் என்ன தகுதி பொருளாதாரம்,வேலை இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள ஒரு சராசரி ஆணின் நிலப் பிரபுத்துவ மனம் ஒப்பவில்லை. இது போன்ற தகுதிகளைக் கொண்ட எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது (சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம், சிறிய வயதிலேயே அவர் மேலாளராகி விட்டார்) அவர் சொன்னது எனக்கு வரும் மனைவி வேலைக்கு செல்ல கூடாது என்றார்.
இது கேள்விகளைக் கேட்ட அந்தப் பெண்ணின் அளவுகோலுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. தன்னைவிட தகுதி குறைந்த சம்பளம் குறைவாக வாங்கும் ஆணை எந்தப் பெண்ணுமே அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அந்த அளவு தகுதி உள்ள ஆண் அதற்கு நேர் எதிராக சிந்திக்கிறார்.(நான் வாங்கும் சம்பளமே போதும் எனக்கு துணையாக வருபவர் வீட்டில் இருந்தால் போதும்) .
பெண்களின் இந்த எதிர்பார்ப்புகளை தவறென்றும் சொல்லவில்லை அவர்கள் வேலைக்கு சென்று பெரிதாக சம்பாதித்தாலும் சமூகமும் உடனே மாறி விடாது இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் சமூக மாற்றங்களை உருவாக்க முடியாது.அவர்களை மதிக்க வேண்டும் சமமாக நடத்த வேண்டும் என்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை.
ஆனாலும் பரந்த சிந்தனை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் இவர்களின் சாதி அல்லாமால் வேறு ஏதானும் சாதியில் இருப்பார்கள். அதாவது முன்னாடி சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் நிலை (deadlock situation). (எல்லோராலும் காதலிக்கவும் முடிவதில்லை :))
சரி இதற்கு என்ன தான் தீர்வு? முதலில் இந்த சமூகத்தைப் பற்றி தெளிவான பார்வை வர வேண்டும் பின்னர் அந்தப் பார்வையில் நமது மதிப்பீடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஒரு ஆழ்ந்த புரிதல், விட்டுக் கொடுத்தல், திருமணம் செய்ய அவர் பணிபுரியும் தொழில்நுட்பப் பிரிவுகளை கேட்பது போன்ற முட்டாள் தனமான நடவடிக்கைகளை கைவிடுதல் போன்ற பல "தல்" களின் மூலம் இது முடிவுக்கு வரலாம். ஆனால் மேற் சொன்னதைப் போன்றே அந்த அளவு பக்குவம் வர நீண்ட காலம் பிடிக்கலாம். உங்களது கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்
என்ன மாதிரியான தயக்கம் என்று புரியவில்லை.
பாரசீகத்தை விடவா தமிழ் முக்கியத்துவம் இல்லாத மொழி ?
ஒருவேளை மொழிபெயர்க்கப் படும் அளவுக்கு தமிழில் இலக்கியங்களே இல்லை என்று கருதுகிறார்களோ என்று ஐயமாக இருக்கிறது.
இந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்
இறுதியாக பெயர்க்காரணம் இவர் இந்த நபர் சீமான் மீது வசைமாரி பொழிவதாக நினைத்துக் கொண்டு இவர் மல்லாந்து படுத்துக் கொண்டு துப்பிக் கொண்டிருக்கிறார் எனவே இவரின் பெயர் துப்பி துப்பி என்று குறிப்பிடுகிறேன்
கருத்துக்களை திறந்த மனதோடு வரவேற்கிறேன் !!